உலக நாயகன் – செங்கிஸ்கான்

These two days I took vocation to my native place. Also, I was trying to read some book on these days to avoid my loneliness

I chose Genghis Khan (செங்கிஸ்கான்). I finished this book around 4 hrs. This was quite interesting story about the man, who mounted as demajin and converted to Genghis Khan.

Later of the day, I wrote a Tamil kavithai of the story. I put it in below.

குரங்கிலிருந்து உதித்த முதல் தலைவனோ !
சிதறுண்ட குலத்தை சீர்திருத்த வந்தீரோ !
கதிரவன் கண்ணசையும் வேளையில்
உம்மினத்தோரின் கடமை தான்
எளியோர் பெறும் கொடுமையே!
களவானைக் கணவனாய்க் கொண்ட
உன் தாயின் நிர்கதியே சான்று!
உடை பட்ட இனத்தை
முடயுமளவு அணைத்தும்
முடியாததை அனைத்து ஆள துடிக்கும்
உன் சிநேகிதனின் எண்ணம்
உனக்கு சிநேகமனது
சிநேகிதனோ விரயமானான் !
களத்தில் கத்தி கொண்டு களமிறங்கிய
பல வீரர் மத்தியில் – நீர்
புத்தி கொண்டும் புகுந்தாய்!
டெமாஜீன் செங்கிஸ்கானாக ஆனவுடன்
குவளைக்குள் உளரும் தண்ணீரை
கரைபுரளும் ஆறாய் திக்கெட்டும் விரட்டினாய்
கூடாரத்தில் இனப்பெருக்கம் செய்தவனை
நிலப்பெருக்கமும் கொள்ள வைத்தாய்
விழியிருந்தும் வழியறியா பயணாளிக்கு
கிடைத்த திசைக்காட்டி போல
உம் மக்களுக்கோ
நீர் இயற்றிய சட்டமே!
வம்சவழி ஆட்சியை – நீர்
ஒழிக்கத் தவறியது
இன்னலாய்த் தொடர்கிறது
இந்தியாவில் இன்றளவும் !
இந்தியா ஓர் அதிசய மென்பது
நீரறிந்த ஓர் உண்மை – காரணம்
ஆசியா உன் ஆசைக்கு வளைந்தபோது
இந்தியாவின் இமயத்திடம்
நீ தோற்றது போதாதா !
Thanks for your time.
நவநீதன்
Advertisements

Prayer to protect our Indian Women

வருத்தம் தவிர் எம் இந்தியப் பெண்ணே!

இந்தியாவில் பெண்களின் வாழ்க்கையில் பாதுகாப்பிற்கு பல கேள்விகள் எழுகின்றது.அதிலும் ஏழ்மைப் பெண்ணின் நிலையோ போராட்டம் நிறைந்தது என்பதில் ஐயமில்லை.நல்லவர்கள் உறக்கமும், தீயவர்களின் தீண்டலும், தினந்தோறும் இருள் கடலில் தள்ளுகின்றன இவ்விந்தியப் பெண்களை.

காய்ந்து பாலைவனமாய் காணப்படும் எமது இந்தியா, எம் பெருமான் கிருஷ்ணனின் பிறப்பிற்காக கற்பகிரகமாய் காட்சி தருகின்றது.இந்நாட்டில் நிதியினால் நிலைநிறுத்தப்பட்ட நீதியெனும் அநீதியை அளித்து, உண்மை நீதியை இவ்வுலகிற்கு உணர வைப்பதற்காக.

இப்பெண்களின் நிலையையும், கிருஷ்ணனின் வருகையும் நினைத்து இச்சிந்தையில் எழுப்பப்பட்ட கவிதை உங்கள் கண்களில் இதோ !

இந்தியப் பெண்ணே!
வருந்தாதே இனி!

கேளிரைக் கடவுளாய்க் கண்ட 
தேசத்தில் உயிர்த் தெழுந்தாய் !

ஆண்மகனின் அடிப்படைக் கடமைதான் 
உன்னைக் காத்தலினும் வேறேது ?

கண்ணீரில் கரை புரளவைக்கும் 
இன்றைய  பெண்ணின் நிலைதான் 
சதி புரியும் நரிக்கூட்டத்தால் 
தாக்கப்படும் தனி மான்போல்  
கதியற்றுக் கிடக்கின்றதே !

அதர்மச் சதியின் ஆற்றலால் 
இப்பெண்டிரின் கண்ணீரைக்களவாடும் பொருட்டு   
இடியுடன் கூடும்  இருள்மழைபோல் 
இந்தியாவின் நீதி நிலைமையோ  
நிதியால் வலுப் பெறுகின்றது !

காய்ந்த இப்புவி தான் 
கர்பகிரகமாய் உருவெடுக்கிறது 
கிருஷ்ணனின் வருகைக்கு !
நீதிக்கு உயிர் அளித்து 
நிதியின் அகந்தை அழிக்க !

English short transcription

This Tamil Kavithai was written based on the poor and pathetic situation of Indian women who were all respected as equal to GOD in India earlier.But, In current scenario, they are being teased and tortured everywhere rapidly by the wolfs.

We are not sure now, Whether our India is supporting to these women or not? Our system is being refined by currency(corrupt currency).If out Indian system is not supporting to our fellow women, we people are praying for our Lord Krishna need to born in our place once again(after the krukshetra war) to place the misplaced system and to teach a lesson once again to the evil doings.

Garba Graha is the place where Lord Krishna was born

still howmany?

http://www.thehindu.com/news/cities/bangalore/child-raped-in-bangalore-school-parents-protest/article6221227.ece

http://www.bbc.com/news/world-asia-india-27615590

Thanks for coming.

The Hen’s violent questions to the brutal rapists

Recently, In Tamilnadu ‘s salem district a 5th standard girl was raped and hanged in the tree by few wild animals who must be punished heavily.

If you want to know more:

http://timesofindia.indiatimes.com/city/chennai/Girl-found-hanging-from-tree-was-raped-and-strangled-to-death-says-autopsy-report/articleshow/30539673.cms 

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/five-held-for-rape-murder-of-10yearold-girl/article5712034.ece

Always hen gives priority to chicks:

In my home, I happened to view the beauty of how the hen and it’s crew securing the chicks, which was hatched before few weeks. The chick’s mother hen was used to be attacked by other members(hens) usually. But, even if victim’s chick comes to take the part food with the opponent crew, the opponent leaving the way to the beauty chicks without any mess. This is astonishing isn’t? ! 🙂

Short des:

A Tamil kavithai which is described about the small comparision of hen’s life with the brutal rappists. The hen is condemnably questioning strictly to those child burglars of this incident. It is just an attitude comparison of fifth sense hen’s attitude Vs sixth sense human’s attitude:

முந்தா நாள் பிறந்த கோழிக்குஞ்சுயை அரவணைக்கும் தாய் அல்லா மற்றொரு கோழி,சில மூட மனிதர்களின் காமச் செயலைக் கண்டு, அவர்களைப் பார்த்து கேட்கப்படும் கேள்வி, இங்கே கவிதையாய்!

 

இப்புவியில் யாம்தரித்தது
கோழி யவதாரம் !

 

சிதறிய உணவையும்
சிந்தாமல் உண்போம்!

 

வரம்பு மீறும் பங்கானுக்கு 
முறைமீரா பாடம் புகட்டுவோம் !

 

எதிரியின் பாலகயெம்மை முரைத்தாலும் 
அப் பிஞ்சிற்கு வழிவகுத்து 
எஞ்சியதைப் பெறும்  எம்மினம் 
பெற்றது ஐயறிவே !

 

அடேய்!  மானிடனே
ஆண்பெண் பிரிவினையறியா யெமக்கு 
உன்மேல் எழுந்த வினாவோ ?

 

அண்மைக் குடிலில் நித்திரை கொண்ட 
பாலகியின் அலறல் மறந்து  
ஆசை கொள்ளுங் கொடுங்காமம் 
மிஞ்சிய ஓரறிவின் கேடா ?

<!–

பதில் கூறு மானிடனே   hens

–>

 


Thanks,
Nava

The Pain of an Ant – ஓர் எறும்பின் வருத்தம்

அதிகாலை உணவிற்குப் புறப்படும் எறும்புக் கூட்டத்தில் ஓர் எறும்பு, ஒரு மானுடனின் செயலைப் பார்த்து படிக்கும் கவிதை..

விண்ணில் முடிசூடிய விடியனும்
மண்ணில் மகிமைகொண்ட மலர்களும்
காலைக் காதலில் காலந்தவறா !

இவ்விறையன்பிற்க் இடையூறின்றி
வயிற்றுப் பசி உண்டிற்காக
வரிசையாய் படையெடுக்கும்
எம்குலத்தை(எறும்புக்குலத்தை) மிஞ்சிய மானுடனோ

பனியுடன் கடுமையாய்ப் பணிபுரிந்து
பக்திகொண்டு காத்து நின்றான்
திறக்கப்படும் மதுக்கடைக் கருகே !

இவஞ்செயலின் விளவைக் கற்பிக்க
வாயில்லையெமக்கு மொழி பேச – ஆகவே
வாழ்ந்துகாட்டுகிறேன் !

உங்கள் எண்ணங்களை இங்கு தயவு செய்து பதிவு செயுங்கள்.
நன்றி,
நவநீதன்.

Diwali Celebration of 2013 in Home – தீபாவளிக் கவிதை

ஆறு மாத இடைவேளைக்குப் பிறகு தீபாவளி கொண்டாட வீடு திரும்பும் போது 

கிறுக்கப்பட்ட  கவிதை: 

“”அரைவருட சிறையில் வீடறியா பறவை 
விடுமுறை அறிந்ததும் -சலிக்காமல் 
விண்ணில் லுங்கிடான்ஸ் ஆடும் களிப்பு

சுமை தாங்க இமை திறவா இப்பறவை 
அழுக்கு மூட்டை சுமப்பத்தில் 
அப்படியோர் ஆனந்தம் – காரணம் 
பூமாதேவியின் பூக்கரங்கள் அளிக்கும்
புனித நீர் போல் 
அன்னயின் திருக்கரங்களால்
இவ்வுடைகளின் பாவங்களை அகற்ற

முதல் நாள் குளியலில் முகத்தில் வழியும் எண்ணெய் 
வரிசையாய் மொய்க்கும் தேனிக்குத்தெரியும் 
விலையில்லா சுராபானத்தின் ருசி

அடுத்தவர்கள் தன்னை அனுபவிப்பதே 
தன்னுடய சுகமென்ற பலகாரம் 
துன்புறுத்துமளவு இன்புறுத்தியது

விடுமுறையில் விழா கொண்டாடிய இப்பறவை 
வீட்டுப்படி தாண்டும் போது 
தெருநாயும் பாவம் பார்க்கிறது.””

உங்கள் எண்ணங்களை இங்கு தயவு செய்து பதிவு செயுங்கள்.

நன்றி,

நவநீதன்.

எனது கவிதையில் சில வரிகள்

“”இந்தியனுக்கு வேணுமா இன்னொரு கங்கை

கைக்கூப்புங்கள் என் சிந்தையிடம்

துயில் கொள்ளும் துக்கத்தை தட்டி எழுப்ப “”

சிறு வயதில் சில காரணங்களுக்காக என் கண்ணில் சில காலம் குடி கொண்ட கண்ணீரை கங்கையாய் காண்கிறேன்( என் மக்களின்)அவர்களின் தாகத்தை தீர்பதற்காக !!!!

 

அன்புடன்,
நவநீதன்