உலக நாயகன் – செங்கிஸ்கான்

These two days I took vocation to my native place. Also, I was trying to read some book on these days to avoid my loneliness

I chose Genghis Khan (செங்கிஸ்கான்). I finished this book around 4 hrs. This was quite interesting story about the man, who mounted as demajin and converted to Genghis Khan.

Later of the day, I wrote a Tamil kavithai of the story. I put it in below.

குரங்கிலிருந்து உதித்த முதல் தலைவனோ !
சிதறுண்ட குலத்தை சீர்திருத்த வந்தீரோ !
கதிரவன் கண்ணசையும் வேளையில்
உம்மினத்தோரின் கடமை தான்
எளியோர் பெறும் கொடுமையே!
களவானைக் கணவனாய்க் கொண்ட
உன் தாயின் நிர்கதியே சான்று!
உடை பட்ட இனத்தை
முடயுமளவு அணைத்தும்
முடியாததை அனைத்து ஆள துடிக்கும்
உன் சிநேகிதனின் எண்ணம்
உனக்கு சிநேகமனது
சிநேகிதனோ விரயமானான் !
களத்தில் கத்தி கொண்டு களமிறங்கிய
பல வீரர் மத்தியில் – நீர்
புத்தி கொண்டும் புகுந்தாய்!
டெமாஜீன் செங்கிஸ்கானாக ஆனவுடன்
குவளைக்குள் உளரும் தண்ணீரை
கரைபுரளும் ஆறாய் திக்கெட்டும் விரட்டினாய்
கூடாரத்தில் இனப்பெருக்கம் செய்தவனை
நிலப்பெருக்கமும் கொள்ள வைத்தாய்
விழியிருந்தும் வழியறியா பயணாளிக்கு
கிடைத்த திசைக்காட்டி போல
உம் மக்களுக்கோ
நீர் இயற்றிய சட்டமே!
வம்சவழி ஆட்சியை – நீர்
ஒழிக்கத் தவறியது
இன்னலாய்த் தொடர்கிறது
இந்தியாவில் இன்றளவும் !
இந்தியா ஓர் அதிசய மென்பது
நீரறிந்த ஓர் உண்மை – காரணம்
ஆசியா உன் ஆசைக்கு வளைந்தபோது
இந்தியாவின் இமயத்திடம்
நீ தோற்றது போதாதா !
Thanks for your time.
நவநீதன்
Advertisements