A Kavithai about Friendship – நண்பன்

நம் நண்பர்களுக்கு அர்பணிப்பு!!!

தளர்வுற்ற நிலையில் தள்ளாடியபோது
அருமை நண்பனின் ஆதரவு
அன்னையின் அவதாரமாய் இருக்க  !!

 

யாம் தோல்வி கண்ட நிலையில்
தரைதொட்ட என் தோள்களை
தாழ்ந்து நிமிர்த்திய தோழன்
தந்தையின் பிரதியில் ஐயமில்லை!!

 

மகிழ்ச்சியும் இகழ்ச்சியும்
மாறி மாறி வந்த போதும்
மற்றவர்கள் போல் அல்லாது
உற்றவர் நிலையில் பங்காற்றி
தமையனையும் தாழ்த்தினாய்!!

 

அறிவற்று தவறுற்ற சமயத்தில்
அரவணைத்து அறிவூட்டிய போது
ஆசானாக அடியடுத்தாய்!!

 

என் நாட்களில் – இப்படி
ஒட்டு மொத்த குடியே
உன் உருவில்
உலா கொள்கின்றது

 

நீரின்றி அமையாது உலகு
என்பதற்கு ஈடாய்
நீயின்றி பெரும் இன்பம்
கூட கசக்குதடா!!!

 

மறுக்காமல் அருகில் வா !!
விரைவில் வீழ்த்தலாம் !!
காலனாயினும் கடைசிவரை!!

 

இந்நிகழ்வுகள் மூலம் இச்சிந்தையில்
புகுந்த நீயோ
மறந்திருப்பேன் என நினைப்பது
என்ன விந்தை!!!

 

                                            –நவநீதன்   
Advertisements

Srilankan Tamilian words

இலங்கை அரக்கன் இராவணன் கூட

அத் தமிழரின் அவலநிலை அறிந்திருந்தால்

இராமனாய் அவதரிப்பான்

இராஜபக்ஷேவிற்கு   எதிராக !!!

                                                                   -நவா